நாட்பட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை

நீண்ட நாட்களாக தொடர்ந்து ஆங்கில மருந்துகள் உட்கொண்டும், ஏராளமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டும், எந்த பலனுமின்றி நமக்கு சவாலாக விளங்கக்கூடிய பல நாட்பட்ட நோய்களுக்கு பழமையும், பாரம்பரியமும் மிக்க சித்த மருத்துவ யுக்திகள் மூலம் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

சித்த மருத்துவத்தின் அடிப்படை கோட்பாட்டின் படி மனித உடலில் வாத, பித்த, கபம் என்கிற முக்தோஷங்களின் தன்னிலை மாறுபாடுகள் , சப்த தாதுக்களான உயிர் சத்துக்களின் குறைபாடுகள், உடல் வெப்பம் அதிகரித்தல், இவைகளோடு முறையாக வெளியேறாத கழிவுகளின் தேக்கத்தால் ஏற்படுகின்ற நச்சுத்தன்மையும் நோய்களுக்குண்டான முக்கிய காரணமாக அறிவுறுத்தப்படுகின்றது.

நோய்களின் உபாதைகளை அல்லது குறிகுணங்களை தணிப்பதோடு நின்று விடாமல், அதன் ஆணி வேர் கண்டறியப்பட்டு நோய்களை வேரறுக்கும் விதமாக “நோய் நாடி, நோய் முதல் நாடி” என்ற தத்துவத்தின் அடிப்படையில் முறையான நாடி பரிசோதனை மூலம் நோய்களின் மூல காரணம் கண்டறியப்படுகிறது. இதனுடன் நவீன பரிசோதனைகளையும் ஒப்பிட்டு நோய்க்கான காரணங்கள் துல்லியமாக கணிக்கப்படுகிறது.

நமது மருத்துவமனையில் பக்க விளைவுகள் மற்றும் பின் விளைவுகள் இல்லாத, தரமும், வீரியமும் மிக்க சித்த மருந்துகள் மூலம் நோய்கள் உருவாவதற்கு அடிப்படை காரணமாக விளங்கக்கூடிய வாத, பித்த, கபத்தின் விகிதங்கள் சமன் படுத்தப்படுகிறது. மேலும் இயற்கையான முறையில் உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதால், நோய்கள் விரைவாக குணமாவதுடன், அவைகள் திரும்ப வராமல் தடுக்கப்படுகின்றது.

சிறப்பு சிகிச்சைகள்

  • அலர்ஜி

  • சைனஸ்

  • ஆஸ்துமா

  • ஒற்றை தலைவலி

  • தூக்கமின்மை

  • சக்கரை வியாதி

  • இதய நோய்கள்

  • உயர் இரத்த அழுத்தம்

  • உடல் பருமன்

  • உடல் பலவீனம்

  • பெண்களுக்கு ஏற்படும் பொதுவான உபாதைகள்

  • கர்ப்பப்பை கோளாறுகள்

  • வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள்

  • சோரியாசிஸ் மற்றும் தோல்நோய்கள்

  • சிறுநீரக கல், பித்தப்பை கல் மற்றும் மூல நோய்கள்

  • நரம்பு தளர்வு மற்றும் இரத்த சோகை

  • அனைத்து விதமான நாட்பட்ட நோய்கள்