மருத்துவமனை பற்றி

இந்தியாவிலேயே முதன் முறையாக மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்திய முறை மருத்துவமனை.

நமது மருத்துவமனை நோய்களின் அறிகுறிகளை தற்காலிகமாக நீக்க கூடிய ஓர் மருத்துவமனை போல் அல்லாமல், சித்த மருத்துவத்தின் சிறப்பு அம்சமான நாடி பரிசோதனை மூலம் நோய்களின் மூலகாரணங்களை கண்டறிந்து நோய்களில் இருந்தும், பின்விளைவுகள் மிக்க மருந்துகளில் இருந்தும் விடுபட செய்து முழுமையான ஆரோக்கியத்தை அளிக்கிறது.

எமது மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதா, வர்மா போன்ற இந்திய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து திறனாய்வு செய்து 23 வருடங்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கேரள பாரம்பரிய மருத்துவ குடும்பத்தில் பிறந்த பட்டதாரி மருத்துவரும், மத்திய மாநில மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற மருத்துவரான.திரு.இராமசாமி பிள்ளை அவர்களால் 1996 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இம்மருத்துவமனை 23 வருடங்களுக்கு மேலாகியும் எந்த வித விளம்பரமும் இன்றி தன்னுடைய தரமான மற்றும் அறிவியல் ரீதியான சிகிச்சையின் மூலம் உலகின் முன்னணி சித்த மருத்துவ மனையாக விளங்கி வருகிறது.

நமது மருத்துவமனையில் பாரம்பரிய மருத்துவ யுக்திகளை இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்துடன் இணைந்து பயன்படுத்தி நவீன மருத்துவத்திற்கு சவாலாக விளங்கிய கூடிய நோய்களுக்கு 100% பாதுகாப்பான, பின் விளைவுகளற்ற சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

நமது மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்

  • நவீன மருத்துவத்திற்கு இணையாக அனைத்து வசதிகளுடன் கூடிய கணினி மயமாக்கப்பட்ட முதல் சித்த மருத்துவமனை

  • முறையான கல்வித் தகுதியும், தேர்ந்த அனுபவமும் மிக்க மருத்துவ நிபுணர்கள்

  • அரசு சான்றிதழும், அனுபவமும் மிக்க தெரபிஸ்டுகள்

  • துறை சார்ந்த தகுதியும், அனுபவமும் மிக்க மருத்துவ பணியாளர்கள்

  • ISO தரச் சான்றிதழ் மற்றும் தமிழக அரசு பதிவு பெற்ற மருத்துவமனை

  • பெண்களுக்குக்கான பிரத்யேக தனி சிகிச்சை பிரிவு

  • தங்கி சிகிச்சை பெறும் வசதிகள்

  • டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம்

  • மருத்துவமனையில் உள்ளடங்கிய மருந்து செய் நிலையம் மற்றும் மருந்தகம்

  • 22 வருடங்களுக்கும் மேலான தரமான மருத்துவ சேவை