மருத்துவர் பற்றி

ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனையின் நிறுவனரும், முதன்மை மருத்துவருமான மருத்துவர்.S.ராமசாமி பிள்ளை அவர்கள் கேரள பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த பட்டதாரி சித்த மருத்துவர் ஆவார். ஐந்தரை ஆண்டு சித்த மருத்துவ பட்ட படிப்பை முடித்து, இந்திய அரசின், மத்திய இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசின் சித்த மருத்துவ கவுன்சிலில் “A” வகுப்பு பதிவு சான்றிதழ் பெற்றுள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற இலங்கை திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்கை மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். மேலும் அக்குபஞ்சர், ஆயுர்வேதா, வர்மா போன்ற இந்திய மருத்துவ துறைகளில் பல்வேறு சான்றிதழ் மற்றும் பட்டயங்களை பெற்றுள்ளார்.

1996 ஆம் ஆண்டு மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்கான சித்தா மற்றும் வர்ம மருத்துவ சிறப்பு மருத்துவமனையை துவங்கி இன்று வரை 25000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகள் இன்றி வெற்றிகரமாக சிகிச்சை அளித்து வருகிறார். பழமை வாய்ந்த மருத்துவ ஓலைச்சுவடிகளை அழியாமல் பாதுகாத்து பயன்படுத்தும் வண்ணம் 2005 ஆம் ஆண்டு மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையத்தை நிறுவி, தன்னுடைய மூதாதையர்கள் பயன்படுத்தப்பட்ட 300 க்கும் மேற்பட்ட மருத்துவ ஓலைச் சுவடிகளை கணினி படுத்தி பாதுகாத்து வருகிறார். தமிழகத்தில் அழிந்து வரும் மருத்துவ ஓலைச்சுவடிகளை பாதுகாத்து பயன்படுத்தும் வண்ணம் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்திடம் நிதி உதவி பெற்று சுமார் 3000 க்கும் மேற்பட்ட மருத்துவ ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கி மத்திய அரசுக்கு வழங்கி உள்ளார். 120 க்கும் மேற்பட்ட பாரம்பரியம் மிக்க சித்த மருந்துகளை அதன் பழமையும், தரமும் மாறாமல் தனது நேரடி மேற்பார்வையில் தயார் செய்து தனது நோயாளிகளுக்கு வழங்கி வருகிறார்.

இவரின் மருத்துவ சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் ஏற்படுத்தப்பட்ட TKDL இவரை சித்த மருத்துவ வல்லுனர் குழு உறுப்பினராக நியமித்துள்ளது.. சென்னை இம்ப்காப்ஸ் ன் உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், புதுச்சேரி பல்கலை கழகத்தில் UGC திட்டத்தின் கீழ் சுவடிகளை கணினிப் படுத்துவதற்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக் கழகம் இவரை ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமித்துள்ளது.

சிறப்பம்சம்

25 வருடங்களுக்கும் மேற்பட்ட சித்த மருத்துவ சேவை மற்றும் அனுபவம்:

  1991 முதல் 1996 வரை கேரளா மற்றும் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு சித்தா மற்றும் வர்மா மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார்.

  1996 ஆம் ஆண்டு மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்கான சித்தா மற்றும் வர்மா சிறப்பு மருத்துவமனையை துவங்கி நவீன மருத்துவத்திற்கு மாற்றாக அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகள் இன்றி வெற்றிகரமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அனுபவம்:

  2005 ஆம் ஆண்டு மருத்துவ ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையத்தை நிறுவி, அதன் மூலம் பழமை வாய்ந்த மருத்துவ ஓலைச்சுவடிகளை அழியாமல் பாதுகாத்து வருகிறார்.

  2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மருந்து செய் நிலையத்தின் மூலம் 120 க்கும் மேற்பட்ட அரிய வகை சித்த மருந்துகளை அதன் பழமையும், தரமும் மாறாமல் தனது நேரடி மேற்பார்வையில் தயார் செய்து வருகிறார்.

கூடுதல் செயல்பாடுகள்:
2008 ஆம் ஆண்டு ஸ்ரீ ராகவேந்திரா பாரம்பரிய மருத்துவ மேம்பாட்டு மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவி ஏழை, எளிய மற்றும் பாமர மக்களுக்கு இலவச சித்த மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறார்.