மருந்து செய் நிலையம்

ஒரு நோயானது எவ்வாறு ஒரே மாதிரியான தாக்கத்தை எல்லோர்க்கும் ஏற்படுத்துவது இல்லையோ, அதே போன்று தான் ஒரு மருந்தும் ஒரே மாதிரியான பலனை அனைவருக்கும் அளிப்பதில்லை. ஒவ்வொரு தனிமனிதனின் உடல்நிலையை நன்கு ஆராய்ந்து அதற்கு ஏற்ற மருந்துகளை நமது மருத்துவமனை வளாகத்துக்குள்ளயே தயார் செய்து கொடுப்பது நமது மருத்துவமனையின் சிறப்பம்சமாகும். நமது மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் பார்முலாக்கள் அனைத்தும் நமது மருத்துவ ஓலைச்சுவடி ஆய்வு மையத்தின் ஓலைச் சுவடிகளிலும், பாரம்பரிய வைத்தியர்களின் அனுபவ குறிப்புகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவை. திறன் மிக்க பரம்பரை வைத்தியர்களின் துணையுடன் அரிய மூலிகைகளை அடையாளம் கண்டு, கலப்படமற்ற கடை சரக்குகளை (அங்காடி மருந்துகளை) தேர்ந்தெடுத்து, மருந்து தாவரவியல் மற்றும் மருந்து அறிவியல் போன்ற துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளுடன், நமது மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. இதனால் அவைகள் உயர்ந்த தரமும், வீரியமும், மிகுந்த பலனும் மிக்கவையாக விளங்குகிறது. மேலும் 100% பின் விளைவுகள் மற்றும் பக்க விளைவுகளற்ற இந்த சித்த மருந்துகள் நோய்களை நீக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து நோய்கள் மீண்டும் அணுகாமல் தடுக்கிறது.

சில உன்னதமான மருந்துகள்

  • காயத்திருமேனி தைலம்

  • வாத சர்வாங்கம் தைலம்

  • காய சர்வாங்கம் தைலம்

  • வாத ராட்சசன் சூரணம்

  • வாத சஞ்சீவி குடிநீர்

  • நிலவேம்பு குடிநீர்

  • பித்த சஞ்சீவி குடிநீர்

  • கப சஞ்சீவி குடிநீர்

  • கரப்பான் குடிநீர்

  • கரப்பன் தைலம்

  • பித்த சஞ்சீவி லேகியம்

  • கப சஞ்சீவி லேகியம்

  • இருதய சஞ்சீவி சூரணம்

  • கற்ப சஞ்சீவி சூரணம்

  • நெல்லிக்காய் லேகியம்

  • தாதுவிருத்தி லேகியம்

  • பஞ்சமூலி கற்பம்

  • கரிசாலை கற்பம்

  • மதுமேக சூரணம்

  • மேக சர்வாங்க குடிநீர்

  • சூலைக் குடிநீர்

  • மனோமித்ர லேகியம்

  • ரக்த சுத்தி மாத்திரை

  • கூந்தல் தைலம்

  • குளியல் சூரணம்

  • சந்தனாதி தைலம்