மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை

சமீப காலமாக பெருகி வரும் கழுத்து வலி மற்றும் இடுப்பு வலி, மூட்டுவலி, எலும்பு தேய்மானம், டிஸ்க் நழுவுதல் போன்ற உபாதைகள் அனைத்து தரப்பினரையும் அவதிக்குள்ளாகிறது. ஓர் இயந்திரத்தை சரியாக பராமரிக்காமல், ஓய்வின்றி பயன்படுத்தும் போது, விரைவில் தேய்மானங்களை அடைந்து பழுதாவதை போன்றுதான் மூட்டு மற்றும் தண்டுவட நோய்கள் ஏற்படுகின்றன. ஓய்வற்ற உழைப்பு, நீண்ட நேரம் கணினியில் அமர்தல், அதிக நேரம் கண்விழித்தல், உடற்பயிற்சியின்மை, முறையற்ற உணவு பழக்கம், உடல் பருமன், போன்ற நவீன வாழ்க்கை முறை மாற்றத்தாலும், அதிகப்படியான வாகனம் ஓட்டுதல், அதிக எடை தூக்குதல், வயிற்று கோளாறுகள் போன்ற காரணங்களாலும், முதுகெலும்புகளிலும், மூட்டுகளிலும் உராய்வை தடுக்கக் கூடிய ஜெல் போன்ற திரவம் குறைவதால் வலி, பிடிப்பு போன்றவை ஏற்படுகிறது. இவைகள் நாளடைவில் டிஸ்க் நழுவுதல், நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துதல், கை கால்களை மரக்கச் செய்தல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி,நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கச் செய்வதுடன், அறுவை சிகிச்சைக்கு தள்ளப்படும் கட்டாயத்தையும் ஏற்படுத்தலாம். தொடர்ந்து வலி மாத்திரைகள் உட்கொள்வது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும், அறுவை சிகிச்சை நிரந்தர தீர்வு இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக, குறிப்பாக நவீன மருத்துவம் (அலோபதி) தோன்றுவதற்கு முன்பே சித்தா, ஆயுர்வேதா, வர்மா போன்ற பாரம்பரிய மருத்துவங்களில் எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படக் கூடிய அனைத்து விதமான நோய்களுக்கும் துல்லியமான தீர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 84 வகையான வாத நோய்களுக்கான பெயர்கள், நோய்கள் ஏற்படுவற்கான மூல காரணங்கள் அவற்றிற்குண்டான சிகிச்சை முறைகள் மிக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த பாரம்பரிய சித்த மருத்துவ யுக்திகள், நவீன தொழில் நுட்பத்துடன் திறனாய்வு செய்து நமது மருத்துவமனையில் இன்றைய தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மூட்டு மற்றும் தண்டுவடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆரம்ப நிலையிலேயே முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். நவீன மருத்துவத்திற்கு மாற்றாக சிகிச்சையை மேற்கொள்ள விரும்புபவர்கள், முறையான கல்வித் தகுதியுடன், தேர்ந்த அனுபவமும் மிக்க எமது மருத்துவர்களால் அளிக்கப்படும் தரமான சிகிச்சையை முறையாக பின்பற்றி முழு பலனை அடைய வேண்டுகிறோம்.

நமது மருத்துவமனையில் கீழ்கண்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகள் இன்றி சிகிச்சை அளிக்க படுகின்றது:

 • கழுத்து மற்றும் இடுப்பு வலி

 • எலும்பு தேய்வு

 • மயக்கம்

 • தோள்பட்டை வலி

 • சவ்வு விலகுதல்

 • நரம்புகளில் அழுத்தம்

 • முடக்கு வாதம்

 • முடக்கு வாதம்

 • நரம்பு தளர்ச்சி

 • நரம்பு தளர்ச்சி

 • தண்டு வட அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படக்கூடிய உபாதைகள்

 • அனைத்து விதமான எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள்