ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை சித்த மருத்துவத்தின் அடையாளம் நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுப்பதற்கும், வந்த நோய்களை விரைவில் குணப்படுத்துவதற்கும், ஆரோக்கியத்தை முழுமையாக மேம்படுத்தவும் சிறந்த சிகிச்சை

குடல் குளியல் சிகிச்சை

குடல் குளியல் சிகிச்சை

வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் குளியல், வருடத்திற்கு இரண்டு முறை வயிறு சுத்தம் என்பது நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கான நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய மருத்துவ யுக்திகள். வயிற்றை சுத்தப் படுத்த விளக்கெண்ணெய், மூலிகை கஷாயம் மற்றும் எனிமா போன்றவற்றை பயன்படுத்தி உடலில் தேவையற்ற கழிவுகளையும், நச்சுகளையும் வெளியேற்றி ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். ஆனால் இன்றைய அவசர உலகத்தில் உட்கார்ந்து உண்பதற்கே நேரம் இல்லாத பொது இவையெல்லாம் சாத்தியமற்று போய்விட்டது.

வாயில் தொடங்கி ஆசன வாய் வரை உள்ள நம் செரிமான மண்டலத்தில் பெருங் குடலானது சுமார் 5அடி நீளமும் 2.5 அங்குலம் சுற்றளவும் கொண்டது. பெருங்குடலின் செரிமானத்துக்கு பிறகு ஏற்படக் கூடிய கழிவுகள் அன்றாடம் வெளியேறாவிட்டால் அவை நஞ்சாக மாறி ரத்தத்தில் கலந்து பல நோய்களை ஏற்படுத்தும். மேலும் இந்த கழிவுகள், உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் உற்பத்தியை தடுக்கிறது. இதனால் வைட்டமின் K, போலிக் ஆசிட் மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற மனித உடலுக்கு தேவையான சத்துக்கள் குறைவதற்கு காரணமாகிறது.

குடல் குளியல் சிகிச்சையானது நோய்களை முன் கூட்டியே தடுத்து முழுமையான ஆரோக்கியத்தை அடையும் வண்ணம் “வருமுன் காப்போம்” என்ற நோக்கத்துடன் அளிக்கப்படுகிறது. வலியற்ற, பாதுகாப்பான, பின்விளைவுகளற்ற இந்த குடல் குளியல் சிகிச்சையானது நமது குடலை சுத்தப்படுத்துவதன் மூலம், உடலையும் சுத்தப் படுத்துகிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடலை சுத்தப்படுத்துவது ஆயுளை வளர்க்கும் சித்த மருத்துவத்தின் மிக சிறந்த யுக்தியாகும்.

எங்கள் அனைத்து வேத நலச்சிகிச்சைகள் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்:

COLON HYDRO THERAPY

To lead a healthy life free off diseases. Our ancestors have followed the traditional medical techniques of having oil bath twice a week and stomach cleaning twice a year. In ancient days, in order to maintain perfect health castor oil, herbal kashayam or enema has been used to eliminate dregs and toxic substances from the body. In this present mechanical fast changing world, there is not enough time to sit and dine and hence the olden day customs have not been scrupulously followed.

In our digestive region, the large intestine starts from the mouth and ends at the anus, is 5 feet long and 2.5 inches in diameter. After the food gets digested in the large intestine, the waste products will emanate. It has to be regularly eliminated failing which the same will turn into toxic substances and gets mingled in the blood and enables one to acquire more diseases. Further these wastes or dregs prevents the generation of good bacteria and also reduces the necessary vitamins namely K-Bolic acid, B-Complex which our body requires.

As per the saying “Prevention is Better than Cure”, this colon hydro therapy treatment prevents the occurrence of the diseases well in advance and enables one to attain perfect health. This Colon Hydro Therapy treatment is painless and without side effects cleans our intestines and thereby our whole body too. This Siddha medicine’s special technique of cleaning intestines increases the longevity of the individual.

KNOW ABOUT ALL OUR VEDIC WELLNESS TREATMENTS:

அளிக்கப்படும் சிகிச்சைகள்
சிகிச்சை முறை:

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பெருங்குடலை சுத்தப் படுத்தும் இந்த சிகிச்சை முறையானது குடல் குளியல் சிகிச்சை (Colon Hydro Theraphy) என்று அழைக்கப்படுகிறது. சுமார் 40-60 நிமிடம் தேவைப்படுகின்ற இந்த சிகிச்சையின் போது, 15 லிருந்து 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த மற்றும் இளம் சூடான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. சிகிச்சை எடுத்தல் கொள்பவரின் ஆசன வாய் வழியே குடலை சுத்தப்படுத்தும் ப்ரத்யேக கருவி செலுத்தப்படுகிறது. இந்த கருவி ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த கருவியில் இணைக்கப் பட்டுள்ள ஒரு குழாய் சுத்தமான நீரை உள்ளே பாய்ச்சி மற்றொரு குழாயானது அசுத்த நீரையும்,கழிவுகளையும் உறுஞ்சி வெளியே தள்ளும். குளிர்ந்த நீரும் இதமான வெந்நீரும் மாறி மாறி செலுத்தப் படுவதன் மூலம் பெருங்குடல் முதல் மலக்குடல் வரையிலுள்ள குடல் பகுதிகளில் தேங்கிக் கிடைக்கும் நாட்பட்ட கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.

பயன்கள்:

நவீன கால வாழ்க்கை மாற்றத்தால் ஏற்படக்கூடிய மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற நோய்களிலிருந்து முழுமையாக குணமடைய உதவும்.
நாட்பட்ட நோய்களான, சோரியாசிஸ், முடக்குவாதம், பக்கவாதம், பார்க்கின்சன், நரம்பு தளர்ச்சி, போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தொப்பையை குறைத்து,வயிற்றை சீராக்கி, உடல் பருமனை குறைக்கவும், முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அணைத்து தரப்பினருக்கு ஏற்ற உன்னத சிகிச்சை.

பயன்கள்:​

முதன்மை மருத்துவர் அல்லது உதவி மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு மட்டுமே சிகிச்சை வழங்கப்படும்