Authentic Classical Siddha Medicines are prepared on thebasis of Ancient Medical Palm Leaf Manuscripts
மருந்து செய் நிலையம்
ஒரு நோயானது எவ்வாறு ஒரே மாதிரியான தாக்கத்தை எல்லோர்க்கும் ஏற்படுத்துவது இல்லையோ, அதே போன்று தான் ஒரு மருந்தும் ஒரே மாதிரியான பலனை அனைவருக்கும் அளிப்பதில்லை. ஒவ்வொரு தனிமனிதனின் உடல்நிலையை நன்கு ஆராய்ந்து அதற்கு ஏற்ற மருந்துகளை நமது மருத்துவமனை வளாகத்துக்குள்ளயே தயார் செய்து கொடுப்பது நமது மருத்துவமனையின் சிறப்பம்சமாகும். நமது மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் பார்முலாக்கள் அனைத்தும் நமது மருத்துவ ஓலைச்சுவடி ஆய்வு மையத்தின் ஓலைச் சுவடிகளிலும், பாரம்பரிய வைத்தியர்களின் அனுபவ குறிப்புகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவை. திறன் மிக்க பரம்பரை வைத்தியர்களின் துணையுடன் அரிய மூலிகைகளை அடையாளம் கண்டு, கலப்படமற்ற கடை சரக்குகளை (அங்காடி மருந்துகளை) தேர்ந்தெடுத்து, மருந்து தாவரவியல் மற்றும் மருந்து அறிவியல் போன்ற துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளுடன், நமது மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. இதனால் அவைகள் உயர்ந்த தரமும், வீரியமும், மிகுந்த பலனும் மிக்கவையாக விளங்குகிறது. மேலும் 100% பின் விளைவுகள் மற்றும் பக்க விளைவுகளற்ற இந்த சித்த மருந்துகள் நோய்களை நீக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து நோய்கள் மீண்டும் அணுகாமல் தடுக்கிறது.
- மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்கான சிறப்பு மருந்துகள்
- நாட்பட்ட நோய்களுக்கான சித்த மருந்துகள்
- நோய்களை முன்கூட்டியே தடுப்பதற்கான காயகல்ப மருந்துகள்
- நவீன கால வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படக்கூடிய அன்றாட பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பதற்கான நச்சு தன்மையற்ற, ரசாயனமற்ற மூலிகை மருந்துகள்.
- போன்றவை நமது மருந்து செய் நிலையத்தில் தயார் செய்யப்படுகிறது.
சில உன்னதமான மருந்துகள்
- காயத்திருமேனி தைலம்
- காய சர்வாங்கம் தைலம்
- வாத சஞ்சீவி குடிநீர்
- பித்த சஞ்சீவி குடிநீர்
- கரப்பான் குடிநீர்
- பித்த சஞ்சீவி லேகியம்
- இருதய சஞ்சீவி சூரணம்
- நெல்லிக்காய் லேகியம்
- பஞ்சமூலி கற்பம்
- மதுமேக சூரணம்
- சூலைக் குடிநீர்
- ரக்த சுத்தி மாத்திரை
- குளியல் சூரணம்
- வாத சர்வாங்கம் தைலம்
- வாத ராட்சசன் சூரணம்
- நிலவேம்பு குடிநீர்
- கப சஞ்சீவி குடிநீர்
- கரப்பன் தைலம்
- கப சஞ்சீவி லேகியம்
- கற்ப சஞ்சீவி சூரணம்
- தாதுவிருத்தி லேகியம்
- கரிசாலை கற்பம்
- மேக சர்வாங்க குடிநீர்
- மனோமித்ர லேகியம்
- கூந்தல் தைலம்
- சந்தனாதி தைலம்
MEDICINE MANUFACTURING UNIT:
As a disease does not affect the same impact on everybody even so a medicine does not render the same relief to all. After diagnosing every individual’s health in all aspects, most of the medicines are prepared in our hospital campus and given to them, which is a specialty of this hospital.
We are well aware that modern scientific research and evidence-based treatments are absolutely necessary to implement our siddha medicines for curing present ailments. Our teams of Siddha Experts, Varma Specialists, Manuscript Research Scholars and Tamil Pandits under the leadership of Dr.S.Ramaswamy Pillai, Chief Physician have done extensive research of analyzing the facts furnished in the age old palm leaf manuscripts through modern science and technology. By this measure, we are able to prepare highly potential and effective medicines which are 100% natural, safe and without any side effects and adverse effects for promoting Global Health.
All the medicines that are prepared in this hospital are from the formulae inscribed in the Medical palm leaf manuscripts and also from the guidance of well-experienced traditional physicians. Our Siddha medicine ingredients are highly qualitative and rich in potential. Nearly 120 classical siddha medicines are prepared exclusively for our patients use under the direct supervision of our Chief Physician without any change in their inherent quality. The Medicines are proven effective, time tested and safe without side effects.
We are well aware that modern scientific research and evidence-based treatments are absolutely necessary to implement our siddha medicines for curing present ailments. Our teams of Siddha Experts, Varma Specialists, Manuscript Research Scholars and Tamil Pandits under the leadership of Dr.S.Ramaswamy Pillai, Chief Physician have done extensive research of analyzing the facts furnished in the age old palm leaf manuscripts through modern science and technology. By this measure, we are able to prepare highly potential and effective medicines which are 100% natural, safe and without any side effects and adverse effects for promoting Global Health.
All the medicines that are prepared in this hospital are from the formulae inscribed in the Medical palm leaf manuscripts and also from the guidance of well-experienced traditional physicians. Our Siddha medicine ingredients are highly qualitative and rich in potential. Nearly 120 classical siddha medicines are prepared exclusively for our patients use under the direct supervision of our Chief Physician without any change in their inherent quality. The Medicines are proven effective, time tested and safe without side effects.
OUR CLASSICAL SIDDHA PREPARATIONS
- Kaya Thirumeni Thailam
- Kaya Sarvanga Thailam
- Vadha Sanjeevi Kudineer
- Pitha Sanjeeve Kudineer
- Karappan Kudineer
- Pitha Sanjeevi Lehiyam
- Hirudhaya Sanjeevi Chooranam
- Nellikai Lehiyam
- Pancha Muli Karpam
- Madhumega Chooranam
- Soolai Kudineer
- Raktha Suthi Mathirai
- Kuliyal Chooranam
- Vadha Sarvanga Thailam
- Vadha Ratchasan Chooranam
- Nilavembu Kudineer
- Kabha Sanjeevi Kudineer
- Karappan Thailam
- Kabha Sanjeeve Lehiyam
- Karpa Sanjeevi Choornam
- Thathu Viruthi Lehiyam
- Karisalai Karpam Tablet
- Mega sarvanga Kudineer
- Manomithra Lehiyam
- Koondhal Thailam
- Chandhanadhi Thailam
சில உன்னதமான மருந்துகள் :
| காயத்திருமேனி தைலம் உடலில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான வலிகளை போக்க கூடியது |
| வாத சர்வாங்கம் தைலம் நாட்பட்ட மூட்டு மற்றும் முடக்கு வாதத்திற்கு பயனுள்ள மருந்து |
| காய சர்வாங்கம் தைலம் உடலில் ஏற்படக்கூடிய காயங்களுக்கு கைகண்ட மருந்து |
| வாத ராட்சசன் சூரணம் உடலில் வாத சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்குகிறது |
| வாத சஞ்சீவி குடிநீர் மூட்டு வாதம், முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளிலிருந்து முழுமையாக விடுபட உதவி புரிகிறது. |
| வாத லேகியம் மூட்டு மற்றும் தண்டுவட நோயாளிகளுக்கு உண்டாகும் வலி, வீக்கம் போன்றவற்றை நீக்குகிறது. |
| வாத நிவாரன் மாத்திரை மூட்டு வலி, இடுப்பு வலி, மூட்டுகளில் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்த வல்லது. |
| நிலவேம்பு குடிநீர் பொதுவாக ஏற்படக்கூடிய காய்ச்சலையும் , வைரசால் ஏற்படக்கூடிய காய்ச்சலையும் சரி செய்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. |
| கரப்பன் தைலம் பொதுவான தோல் நோய்களுக்கும், படைகளுக்கும் நல்ல பலனளிக்க கூடியது. |
| வாயு சூரணம் வாயுத் தொல்லையை நீக்கி, சீரணத்திற்கு உதவி புரிகிறது |
| சீரண சூரணம் அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றை நீக்கி சீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. |
| செதில்படை தைலம் சோரியாசிஸ் மற்றும் நாட்பட்ட படை நோய்களுக்கு பலனளிக்க வல்லது |
| தாளீசபத்திரி சூரணம் சளி, இருமல், சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த மருந்து |
| நிலவேம்பு குடிநீர் பொதுவாக ஏற்படக்கூடிய காய்ச்சலையும் , வைரசால் ஏற்படக்கூடிய காய்ச்சலையும் சரி செய்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. |
| பித்த சஞ்சீவி குடிநீர் உடலில் உள்ள பித்தத்தை நீக்கி, சீரண மண்டலத்தை முறையாக இயங்க செய்கிறது |
| கப சஞ்சீவி குடிநீர் நீண்ட நாட்களாக சளித் தொல்லையால் அவதிப்படுகிறவர்களுக்கு மிகச் சிறந்த மருந்து. |
கரப்பான் குடிநீர் ஆரம்ப நிலை தோல் நோய்களிலிருந்து, சொரியாசிஸ் வரை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட மிக சிறந்த மருந்து . |
| பித்த சஞ்சீவி லேகியம் உடலில் பித்தம் அதிகரித்தால் உண்டாகும் வாந்தி, மயக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது. |
கப சஞ்சீவி லேகியம் தொடர்ந்து சளி, இருமல், மூக்கடைப்பு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த மருந்து. |
| சீரண சஞ்சீவி மாத்திரை அஜீரணம், மலசிக்கல் போன்றவற்றை நீக்க வல்லது. |
சுவாச குடோரி மாத்திரை சளி, இருமல், மூச்சு வாங்குதல் போன்றவற்றை முழுமையாக குணப்படுத்த வல்லது. |
| வாயு குளிகை உடலில் வாயுத் தொல்லையை நீக்கி, சீரணத்திற்கு உதவி புரிகிறது. |
| இருதய சஞ்சீவி சூரணம் ரத்தத்தில் தேவையற்ற கொழுப்பை நீக்கி, இதயத்தை பாதுகாத்து பலப்படுத்த வல்லது |
| கற்ப சஞ்சீவி சூரணம் பெண்களுக்குண்டாகும் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் போன்றவற்றை குணப்படுத்த வல்லது |
| நெல்லிக்காய் லேகியம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து நோய்கள் திரும்ப வராமல் பாதுகாக்கிறது. |
| தாதுவிருத்தி லேகியம் இரத்தத்தில் உயிரணுக்களை பெருக்கி ஆண்மையை அதிகரிக்க செய்கிறது. |
| இரத்த விருத்தி லேகியம் இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்து இரத்த சோகையை சரி செய்கிறது |
| பஞ்சமூலி கற்பம் மாத்திரை ஞாபக மறதி, கண்பார்வை மங்குதல், சோர்வு போன்றவற்றிற்கு மிக சிறந்த மருந்து. |
| கற்ப சஞ்சீவி குடிநீர் பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற தீராத வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவற்றை நீக்கி, புத்துணர்வுடன் விளங்க செய்கிறது. |
| வெண்பூசணி லேகியம் பெண்களுக்குண்டான பிரச்சினைகளிலிருந்து முழுமையான தீர்வு அளிக்கிறது. |
| கரிசாலை கற்பம் மாத்திரை இளம் வயதிலேயே ஏற்படுகின்ற நரை, திரை, மூப்பு போன்றவற்றை நீக்கும் மூலிகை கற்பம் . |
| மேக சர்வாங்கம் தைலம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பாதம் வலி, கை, கால் எரிச்சலுக்கு பலனளிக்க வல்லது. |
| மதுமேக சூரணம் சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மிக சிறந்த மூலிகை மருந்து |
| மதுமேக குடிநீர் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி மருந்துகளின் தேவையை குறைப்பதற்கு மிக சிறந்த மருந்து. சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையிலிருந்து இன்சுலின் உபயோகிப்பவர்கள் வரை இம்மருந்தை உட்கொள்ளலாம். |
| நெருஞ்சில் குடிநீர் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கெட்ட நீரை நீக்கி உடலை சுத்தமாக்க உதவுகிறது. சிறுநீரில் உண்டாகும் கிருமிகளையும் அழிக்க வல்லது. |
| சூலைக் குடிநீர் உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கி உடல் பருமனை இயற்கையாக குறைக்க வல்லது. ஊளைச்சதைக்கு சூலைக் குடிநீர். |
| மனோமித்ர லேகியம் மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவற்றிற்கு மிக சிறந்த மூலிகை மருந்து. |
| ரக்த சுத்தி மாத்திரை இரத்தத்தில் ஏற்படக்கூடிய நச்சுத் தன்மையை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்க வல்லது. |
| கூந்தல் தைலம் முடி உதிர்வை தடுத்து, கூந்தலை பொலிவுடன் வளர செய்கிறது. |
| குளியல் சூரணம் தோலில் ஏற்படக்கூடிய சுருக்கங்களை நீக்கி சருமத்தை பளபளப்பாகவும், பொலிவுடனும் விளங்க செய்கிறது |
| சந்தனாதி தைலம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தர வல்லது. |
பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களில் ஏமாறாமல், தாய் மண்ணின் மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளை உபயோகித்து பயனடையுங்கள்.
“ இது வெளி விற்பனைக்கு அல்ல” “எமது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டுமே”.
“ இது வெளி விற்பனைக்கு அல்ல” “எமது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டுமே”.







