நல வாழ்வு சிகிச்சைகள்
உடுத்தும் உடையில் துவங்கிய மேல்நாட்டு நாகரீக மாற்றமானது நம் உணவிலும், உணர்விலும் ஊடுருவி இயற்கையோடு இணைந்த நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து நம்மை விலகி செல்ல வைத்துள்ளது. இதன் விளைவாக ஏற்பட்ட தற்போதைய நவீன கால வாழ்வியல் மாற்றமானது மனிதனை எந்திரத்தனமாக மாற்றி நோய்களிலும், மருந்துகளிலும் சிக்கி தவிக்க வைக்கிறது. இயற்கைக்கு மாறான சுற்றுச்சூழல், அதிக உழைப்பு, மன அழுத்தம், சத்துக்குறைவு, முறையற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை இவைகள் மனிதனை பலகீனபடுத்தி நோய்க்குண்டான வாய்ப்பை அதிகரிக்க செய்கிறது. சில நேரங்களில் ஒரு நோய்க்கு எடுக்கக் கூடிய மருந்துகளே கூட பிற நோய்கள் உருவாக காரணமாக அமைகிறது.
நவீன மருத்துவத்திற்கு மாற்றாக எந்த வித விளம்பரமும் இன்றி 23 வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய தரமான, அறிவியல் ரீதியான, நம்பகத்தன்மை மிக்க சிகிச்சையின் மூலம் அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை பெற்ற நமது ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை தற்போது நோய்களை முன்கூட்டியே தடுத்து முழுமையான ஆரோக்கியத்தை அடையும் வண்ணம் வருமுன் காப்போம் என்ற நோக்கத்துடன் நல வாழ்வு சிகிச்சைகளை அளித்து வருகிறது. சித்தா, ஆயுர்வேதா மற்றும் கேரள பஞ்சகர்மா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து அளிக்கப்படும் இந்த சிறப்பு சிகிச்சையானது, இயற்கையான முறையில் உடலின் நச்சு தன்மையை வெளியேற்றி, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்கிறது. இயற்கையோடு இணைந்து பலநூறு ஆண்டுகள் வாழ்ந்த சித்தர்களின் வாழ்வியல் கோட்பாடுகளை பின்பற்றி அளிக்கப்படும் நமது நலவாழ்வு சிகிச்சைகள், நோய்கள் வருவதை முன்கூட்டியே தடுப்பதற்கான ஓர் முன்னெச்சரிக்கை சிகிச்சை யுக்தியாகும்
நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுப்பது, நோயற்ற நிலையிலும் நிறைவான ஆரோக்கியத்துடனும், வலிமையுடனும் விளங்க செய்வது, நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களால் ஆட்பட்ட பிறகு அவற்றை எளிமையாக மேலாண்மை செய்து, மருந்துகளின் தேவையை குறைத்து, ஆரோக்கியத்துடன் திகழ்வது போன்றவை இந்த நல வாழ்வு சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். இந்த பாதுகாப்பான, பின் விளைவுகளற்ற சிகிச்சையை மேற்கொண்டு நீங்களும் பயனடைவீர்.