இதய நோய் மேலாண்மை
திடீரென்று ஏற்படக்கூடிய விபத்துகளை போன்று சமீப காலமாக இதய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. இது வயதானவர்கள் மட்டுமின்றி, இளம் வயதினரின் மனதிலும் அச்சத்தையும், கேள்வியையும் எழுப்ப தொடங்கியுள்ளது. முற்காலத்தில் வயதானவர்களை மட்டுமே பாதித்த இதய நோய்கள் தற்போது ஆண், பெண், இளம் வயதினர் போன்ற அனைத்து தரப்பினரையும் பாதிப்படைய செய்துள்ளது. முறையற்ற உணவு பழக்கம், இரவு கண் விழித்தல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக கவலை போன்றவைகள் இதய நோய்களுக்கான பொதுவான காரணமாக அமைகின்றன. முறையான மருத்துவம் மேற்கொண்டும், அறுவை சிகிச்சை மேற்கொண்டும் முழு பலனுடன் இயல்பாக வாழ்வது இயலாத காரியமாக உள்ளது. எனவே நோய்கள் வருவதற்கு முன்பே அவற்றை தடுப்பதற்கான ஓர் நல்ல மார்க்கத்தை பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதயத்தின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கும், மருந்துகளின் தேவையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சித்தா, ஆயுர்வேதா வர்மா போன்ற இந்திய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து, உருவாக்கப் பட்ட சிகிச்சை தான் நமது இதய நோய் மேலாண்மை சிகிச்சை.
அனைத்து நலவாழ்வு சிகிச்சைகளை அறிந்து கொள்ள:
காய கற்ப சிகிச்சை | நீரிழிவு மேலாண்மை | இதய நோய் மேலாண்மை | உடல் பருமன் மேலாண்மை | பெண்களுக்கான நலவாழ்வு | குடல் குளியல் சிகிச்சை