நீரிழிவு மேலாண்மை

முற்காலத்தில் வயது முதிர்த்தவர்களையும், வசதியும், சொகுசும் மிக்க வாழ்க்கை வாழ்பவர்களையும் பாதித்த நீரிழிவு நோய் என்கின்ற மதுமேக நோயானது தற்போது அனைத்து தரப்பினரையும் எந்த வித வேறுபாடுமின்றி அவதிக்குள்ளாக்குகிறது. நவீன மருத்துவத்தின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுமையாக குணப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் நீரிழிவு நோயால் ஏற்படுகின்ற டயாபெடிக் ரெடினோபதி (கண் பார்வை பாதிப்பு) , டயாபெடிக் ஆஞ்சியோபதி (இதய பாதிப்பு), டயாபெடிக் நியூரோபதி (நரம்பு பாதிப்பு), டயாபெடிக் நப்ரோபதி (சிறுநீரக பாதிப்பு) போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பது மிகவும் சவாலாக உள்ளது. முறையான சிகிச்சை மேற்கொண்டும், இயல்பான வாழ்க்கை வாழ முடிவதில்லை.

கணையத்தை பலப்படுத்தி, இயற்கையான முறையில் இன்சுலினை சுரக்க செய்யவும், மருந்துகளின் தேவையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் சித்தா, ஆயுர்வேதா வர்மா போன்ற இந்திய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து, உருவாக்கப் பட்ட சிகிச்சை தான் நமது நீரிழிவு மேலாண்மை சிகிச்சை.

அனைத்து நலவாழ்வு சிகிச்சைகளை அறிந்து கொள்ள:
காய கற்ப சிகிச்சை | நீரிழிவு மேலாண்மை | இதய நோய் மேலாண்மை | உடல் பருமன் மேலாண்மை | பெண்களுக்கான நலவாழ்வு | குடல் குளியல் சிகிச்சை

அளிக்கப்படும் முக்கிய சிகிச்சைகள்

  • தொக்கணம் மற்றும் வர்ம மசாஜ்
  • அபியங்கம் (மூலிகை எண்ணெய் மசாஜ்)
  • மூலிகை நீராவி குளியல், மூலிகை தண்டுவட குளியல்
  • சிரோதாரா, சிரோவஸ்தி
  • பிண்ட ஸ்வேதனம் (நவரை கிழி)
  • பிழிச்சல் (மூலிகை எண்ணெய் குளியல்)
இவற்றுடன் மதுமேகம் என்கின்ற நீரிழிவு நோய்க்கான சித்த மருந்துகள், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க கூடிய சித்த மருத்துவ ரசாயன மருந்துகள், முறையான உடற்பயிற்சி மற்றும் சித்த மருத்துவம் அறிவுறுத்தும் உணவு பரிந்துரைகள்.
 

முக்கிய பயன்கள்

  • தேகபலத்தையும், இழந்த ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்க உதவுகிறது.
  • தோள்பட்டை மற்றும் மூட்டு தேய்மானங்களை தடுக்கிறது.
  • கை, கால்கள் மரத்தல், உணர்வற்ற தன்மை மற்றும் பாத எரிச்சலை போக்குகிறது.
  • உடலின் ராஜ உறுப்புகளாகிய கண், இதயம், ஈரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.
  • சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் முதல் இன்சுலின் உபயோகிப்பவர்கள் வரை இந்த சிகிச்சையை மேற்கொண்டு பயனடையலாம்.
  • ஆங்கில மருந்துகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் கூட அவற்றை நிறுத்தாமல், அதனுடன் இணைந்து இந்த பாதுகாப்பான, பின் விளைவுகளற்ற சிகிச்சையை மேற்கொண்டு அதிக பலனை அடையலாம்.

    “முதன்மை மருத்துவர் அல்லது உதவி மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு மட்டுமே சிகிச்சை வழங்கப்படும்”.