காய கற்ப சிகிச்சை
முழுமையான ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலை மட்டுமல்ல, வலிமையும் பொலிவும் மிக்க உடலும், நுண்ணறிவும், ஆற்றலும் மிக்க மனமும், அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் விதமான உத்வேகத்துடனும் திகழ்வதாகும். அவ்வாறான ஆரோக்கியமான நிலை தற்போதைய இளைய தலைமுறையினரிடம் குறைந்து வருகிறது. இயற்கைக்கு மாறான இன்றைய மனித வாழ்க்கையானது, மனிதனை அடுத்தடுத்த தேடுதலுக்கும், பரபரப்பான ஓட்டத்திற்கும் ஆட்படுத்தி, உடலளவிலும், மனதளவிலும் தன்னிறைவற்று இளம் வயதிலேயே மூப்பு நிலைக்கு தள்ளப்படுகிறது. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ விழிப்புணர்வின் காரணமாக உடலின் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டிய முக்கியத்துவம் தெரிந்தும், அதிக உழைப்பு மற்றும் நேரமின்மையின் காரணமாக அவற்றை சரிவர பின்பற்ற முடிவதில்லை. வாத பித்த கபத்தின் தன்னிலை மாறுபாடு, சப்த தாதுக்களின் குறைபாடு, உடல் உஷ்ணம், தேவையற்ற கழிவுகளின் தேக்கத்தால் ஏற்படுகின்ற நச்சுத்தன்மை போன்றவை நோய்களுக்கான வாய்ப்பை உருவாக்குகின்றன. இயற்கையோடு இணைந்து பலநூறு ஆண்டுகள் வாழ்ந்த சித்தர்களின் வாழ்வியல் கோட்பாடுகளை பின்பற்றி அளிக்கப்படும் நமது காயகற்ப சிகிச்சை, நோய்கள் வருவதை முன்கூட்டியே தடுப்பதற்கான ஓர் முன்னெச்சரிக்கை சிகிச்சை யுக்தியாகும்.
அனைத்து நலவாழ்வு சிகிச்சைகளை அறிந்து கொள்ள:
காய கற்ப சிகிச்சை | நீரிழிவு மேலாண்மை | இதய நோய் மேலாண்மை | உடல் பருமன் மேலாண்மை | பெண்களுக்கான நலவாழ்வு | குடல் குளியல் சிகிச்சை