நீரிழிவு மேலாண்மை
முற்காலத்தில் வயது முதிர்த்தவர்களையும், வசதியும், சொகுசும் மிக்க வாழ்க்கை வாழ்பவர்களையும் பாதித்த நீரிழிவு நோய் என்கின்ற மதுமேக நோயானது தற்போது அனைத்து தரப்பினரையும் எந்த வித வேறுபாடுமின்றி அவதிக்குள்ளாக்குகிறது. நவீன மருத்துவத்தின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுமையாக குணப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் நீரிழிவு நோயால் ஏற்படுகின்ற டயாபெடிக் ரெடினோபதி (கண் பார்வை பாதிப்பு) , டயாபெடிக் ஆஞ்சியோபதி (இதய பாதிப்பு), டயாபெடிக் நியூரோபதி (நரம்பு பாதிப்பு), டயாபெடிக் நப்ரோபதி (சிறுநீரக பாதிப்பு) போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பது மிகவும் சவாலாக உள்ளது. முறையான சிகிச்சை மேற்கொண்டும், இயல்பான வாழ்க்கை வாழ முடிவதில்லை.
கணையத்தை பலப்படுத்தி, இயற்கையான முறையில் இன்சுலினை சுரக்க செய்யவும், மருந்துகளின் தேவையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் சித்தா, ஆயுர்வேதா வர்மா போன்ற இந்திய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து, உருவாக்கப் பட்ட சிகிச்சை தான் நமது நீரிழிவு மேலாண்மை சிகிச்சை.
அனைத்து நலவாழ்வு சிகிச்சைகளை அறிந்து கொள்ள:
காய கற்ப சிகிச்சை | நீரிழிவு மேலாண்மை | இதய நோய் மேலாண்மை | உடல் பருமன் மேலாண்மை | பெண்களுக்கான நலவாழ்வு | குடல் குளியல் சிகிச்சை