உடல் பருமன் மேலாண்மை
உடல் பருமன் மேலாண்மை
முறையற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்றவற்றால் அளவுக்கதிகமான கொழுப்பு சத்து உடலில் தேங்கி, உடலின் எடையை அதிகரிக்க செய்கிறது. இவற்றுடன் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் குறைபாடுகளும், பரம்பரை காரணிகளும், ஸ்டெராய்டு மற்றும் ஹார்மோன்சை தூண்டக்கூடிய மருந்துகளின் பின் விளைவுகளும் உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இவை நமது அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதுடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள், மூட்டு தேய்மானம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. உடல் எடையை இயற்கையான முறையில் குறைத்து, சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் விளங்குவதற்கான நோக்கத்துடன் சித்தா, ஆயுர்வேதா வர்மா போன்ற இந்திய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து, உருவாக்கப் பட்ட சிகிச்சை தான் நமது உடல் பருமன் மேலாண்மை சிகிச்சை.
எங்கள் அனைத்து வேத நலச்சிகிச்சைகள் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்:




OBESITY MANAGEMENT
KNOW ABOUT ALL OUR VEDIC WELLNESS TREATMENTS:
அளிக்கப்படும் சிகிச்சைகள்
வெளி சிகிச்சை
வர்மா மற்றும் தொக்கணம்
உத்வர்த்தனம் (பொடிதிமிர்தல்)
பிண்ட ஸ்வேதனம் (நவரை கிழி)
அபியங்கம் (மூலிகை எண்ணெய் மசாஜ்)
மூலிகை நீராவி குளியல், மூலிகை இடுப்பு குளியல்
மூலிகை பற்று, சிரோதாரா
உள் மருத்துவம்
இவற்றுடன் உடலில் தேங்கக்கூடிய திட, திரவ, வாயு கழிவுகளை முறையாக வெளியேற்றவும், நாளமில்லா சுரப்பிகளை முறையாக சுரக்க செய்யவும், இரத்தத்தில் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் தேவையான சித்த மருந்துகள். இவற்றுடன் முறையான உடற்பயிற்சி மற்றும் சித்த மருத்துவம் அறிவுறுத்தும் உணவு பரிந்துரைகள்.
பயன்கள்:
- உடல் பருமனை குறைத்து இயல்பு வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
- மன அழுத்தம், மலட்டு தன்மை, மூட்டு மற்றும் தண்டுவட தேய்மானங்கள் மற்றும் பிற நோய்களையும் தடுக்கிறது.
- உயர் இரத்த அழுத்தம், இதய கோளாறு, நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
“முதன்மை மருத்துவர் அல்லது உதவி மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு மட்டுமே சிகிச்சை வழங்கப்படும்”