ஸ்ரீ ராகவேந்திரா மருத்துவமனை சித்த மருத்துவத்தின் அடையாளம் நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுப்பதற்கும், வந்த நோய்களை விரைவில் குணப்படுத்துவதற்கும், ஆரோக்கியத்தை முழுமையாக மேம்படுத்தவும் சிறந்த சிகிச்சை

இதயநோய் மேலாண்மை

இதய நோய் மேலாண்மை

திடீரென்று ஏற்படக்கூடிய விபத்துகளை போன்று சமீப காலமாக இதய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. இது வயதானவர்கள் மட்டுமின்றி, இளம் வயதினரின் மனதிலும் அச்சத்தையும், கேள்வியையும் எழுப்ப தொடங்கியுள்ளது. முற்காலத்தில் வயதானவர்களை மட்டுமே பாதித்த இதய நோய்கள் தற்போது ஆண், பெண், இளம் வயதினர் போன்ற அனைத்து தரப்பினரையும் பாதிப்படைய செய்துள்ளது. முறையற்ற உணவு பழக்கம், இரவு கண் விழித்தல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக கவலை போன்றவைகள் இதய நோய்களுக்கான பொதுவான காரணமாக அமைகின்றன. முறையான மருத்துவம் மேற்கொண்டும், அறுவை சிகிச்சை மேற்கொண்டும் முழு பலனுடன் இயல்பாக வாழ்வது இயலாத காரியமாக உள்ளது. எனவே நோய்கள் வருவதற்கு முன்பே அவற்றை தடுப்பதற்கான ஓர் நல்ல மார்க்கத்தை பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதயத்தின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கும், மருந்துகளின் தேவையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் சித்தா, ஆயுர்வேதா வர்மா போன்ற இந்திய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து, உருவாக்கப் பட்ட சிகிச்சை தான் நமது இதய நோய் மேலாண்மை சிகிச்சை.

எங்கள் அனைத்து வேத நலச்சிகிச்சைகள் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்:

CARDIAC MANAGEMENT

In recent years, cardiac diseases occur just like sudden accidents. In olden days the elderly only suffered from the heart diseases, but now it has started to affect the younger generation also and has caused in their minds fear and anxiety. Inspite of rapid advancement of Science and Technology and medical awareness, everybody has failed to give proper attention to maintain their health due to hard work and lack of time. The general causes for the heart disease is due to irregular food habits, obesity, lack of proper exercise, Blood pressure, insufficient sleep, mental stress and also due to physiological and hereditary factors. It has become very difficult to lead a normal healthy life inspite of regular medical treatment and surgery. Hence it has become mandatory to find a right way to prevent the heart

diseases well in advance. Our Cardiac Management is an integrated form of Indian traditional medicines namely Siddha, Ayurveda and Varma which aims to reduce the intake of more medications and prevents the occurrence of cardiac disease.

KNOW ABOUT ALL OUR VEDIC WELLNESS TREATMENTS:

அளிக்கப்படும் சிகிச்சைகள்
வெளி சிகிச்சை

தொக்கணம் மற்றும் வர்ம மசாஜ்
அபியங்கம் (மூலிகை எண்ணெய் மசாஜ்)
மூலிகை நீராவி குளியல், மூலிகை தண்டுவட குளியல்
சிரோதாரா, சிரோவஸ்தி, யுரோவஸ்தி
பிண்ட ஸ்வேதனம் (நவரை கிழி)
பிழிச்சல் (மூலிகை எண்ணெய் குளியல்)

உள் மருத்துவம்

இவற்றுடன் இதயத்தை பலப்படுத்தக்கூடிய மூலிகை மருந்துகள், இரத்தத்தில் தேவையற்ற கொழுப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடிய சித்த மருந்துகள், இவற்றுடன் முறையான உடற்பயிற்சி மற்றும் சித்த மருத்துவம் அறிவுறுத்தும் உணவு பரிந்துரைகள்.

பயன்கள்:

முதன்மை மருத்துவர் அல்லது உதவி மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு மட்டுமே சிகிச்சை வழங்கப்படும்