உடல் பருமன் மேலாண்மை
முறையற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்றவற்றால் அளவுக்கதிகமான கொழுப்பு சத்து உடலில் தேங்கி, உடலின் எடையை அதிகரிக்க செய்கிறது. இவற்றுடன் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் குறைபாடுகளும், பரம்பரை காரணிகளும், ஸ்டெராய்டு மற்றும் ஹார்மோன்சை தூண்டக்கூடிய மருந்துகளின் பின் விளைவுகளும் உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இவை நமது அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதுடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள், மூட்டு தேய்மானம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. உடல் எடையை இயற்கையான முறையில் குறைத்து, சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் விளங்குவதற்கான நோக்கத்துடன் சித்தா, ஆயுர்வேதா வர்மா போன்ற இந்திய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து, உருவாக்கப் பட்ட சிகிச்சை தான் நமது உடல் பருமன் மேலாண்மை சிகிச்சை.
அனைத்து நலவாழ்வு சிகிச்சைகளை அறிந்து கொள்ள:
காய கற்ப சிகிச்சை | நீரிழிவு மேலாண்மை | இதய நோய் மேலாண்மை | உடல் பருமன் மேலாண்மை | பெண்களுக்கான நலவாழ்வு | குடல் குளியல் சிகிச்சை