பெண்களுக்கான நலவாழ்வு
பெண்களுக்கான நலவாழ்வு
இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறை, அதிக உடல் உழைப்பு, ஓய்வின்மை, மன அழுத்தம், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகள், முறையற்ற மாதவிலக்கு சுழற்சி போன்றவைகளும், அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளால் தன்னை சரிவர கவனிக்க இயலாமையும் இன்றைய மகளிருக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படை காரணமாக அமைகின்றன. ஆரோக்கியமான பெண்களால் மட்டுமே வளமான குடும்பத்தை உருவாக்க முடியும். எனவே ஆரோக்கியமான பெண்மையை மீட்டெடுத்து, ஆற்றலும், வலிமையையும் மிக்க மகளிரை உருவாக்கும் நோக்கத்துடன் சித்தா, ஆயுர்வேதா வர்மா போன்ற இந்திய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து, வடிவமைக்கப்பட்ட ஓர் உன்னத சிகிச்சை தான் நமது பெண்களுக்கான நலவாழ்வு சிகிச்சை.
எங்கள் அனைத்து வேத நலச்சிகிச்சைகள் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்:




VITAL WELL BEING FOR WOMEN
KNOW ABOUT ALL OUR VEDIC WELLNESS TREATMENTS:
அளிக்கப்படும் சிகிச்சைகள்
வெளி சிகிச்சை
வர்மா மற்றும் தொக்கணம், உத்வர்த்தனம் (பொடிதிமிர்தல்)
பிண்ட ஸ்வேதனம் (நவரை கிழி)
அபியங்கம் (மூலிகை எண்ணெய் மசாஜ்)
மூலிகை நீராவி குளியல், மூலிகை இடுப்பு குளியல், மூலிகை பற்று
லேபனம், சிரோதாரா
உள் மருத்துவம்
இவற்றுடன் நாளமில்லா சுரப்பிகளை முறையாக சுரக்க செய்யவும், ஹார்மோன் மாற்றங்களை சீர்படுத்தவும் தேவையான சித்த மருந்துகள். இவற்றுடன் முறையான உடற்பயிற்சி மற்றும் சித்த மருத்துவம் அறிவுறுத்தும் உணவு பரிந்துரைகள்.
பயன்கள்:
- பெண்களின் பொதுவான பிரச்சினைகளான ஒழுங்கற்ற மற்றும் வலி மிகுந்த மாத விலக்கு சுழற்சியை சீராக்குகிறது.
- மாதவிலக்கு நின்ற பின் ஏற்படுகின்ற உடல் உபாதைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
- உடல் பருமன், மூட்டு வலி, இடுப்பு வலி போன்றவைகள் வராமல் முன்கூட்டியே தடுக்க உதவுகிறது.
- மன அழுத்தம், தூக்கமின்மை, மனசோர்விலிருந்து நிவாரணம் அளித்து, புத்துணர்வுடனும், புதுப்பொலிவுடனும் மற்றும் நிறைவான ஆரோக்கியத்துடனும் விளங்க செய்கிறது.
“முதன்மை மருத்துவர் அல்லது உதவி மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு மட்டுமே சிகிச்சை வழங்கப்படும்”