உங்கள் மருத்துவரைப் பற்றி

டாக்டர் எஸ். ராமசாமி பிள்ளை,
B.S.M.,M.D., (Nat. Med.)
இயக்குனர் / தலைமை மருத்துவர்


மேலும் அறிய

மேலும் அறிந்து கொள்ள

அன்புடன் உங்களோடு
மகத்துவமிக்க மண்ணின் மருத்துவம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், தங்களுடைய தவ வலிமையாலும், மெய்ஞானத்தாலும், உணரப்பட்டு, அறிவியல் அடிப்படையில் பயிற்றுவிக்கபட்ட நமது தாய் மண்ணின் உற்பத்தி தான் சித்த மருத்துவம். உலக மக்களுக்கு இறைவனால் அருளப்பட்ட இந்த மருத்துவம், வானியல், மண்ணியல், உடலியல், உயிரியல், சோதிடம், தந்திரம், மாந்திரீகம், போன்ற பல அறிவியல் யுக்திகளை உள்ளடக்கி, நமது முன்னோர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், பிரதிபலித்து உலகின் வேறு எந்த மருத்துவத்திற்கும் இல்லாத தனி சிறப்புடன் விளங்கி வருகிறது.

நவீன வாழ்க்கை முறை மாற்றமும், எந்திரதனமான வாழ்க்கையும், அனைத்து தரப்பு மக்களையும், பலவிதமான நோய்களிலும், மருந்துகளிலும், சிக்கி தவிக்க வைக்கிறது. நோய்கள் வராமல்முன்கூட்டியே தடுப்பதற்கும், வந்த நோய்களை விரைவாக குணப்படுத்தி மருந்துகளின் தேவையை குறைப்பதற்கும் சித்த மருத்துவம் ஓர் அரிய வாய்ப்பாக விளங்குகிறது.

நவீன மருத்துவத்திற்கு சவாலாக விளங்கக்கூடிய பல நோய்களுக்கு, நமது பாரம்பரிய மருத்துவ யுக்திகளை பயன்படுத்தி தீர்வு அளிப்பதற்கு, அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியும், ஆதாரம் மிக்க சிகிச்சையும் தேவை என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். அதற்காகவே நமது மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும், மருத்துவ ஓலைச்சுவடி ஆய்வுமையத்தில் சித்த மருத்துவ வல்லுநர்கள், வர்ம மருத்துவ நிபுணர்கள், தமிழ் அறிஞர்கள், சுவடி ஆய்வாளர்கள் இணைந்து நவீன தொழில் நுட்பத்தின் மூலம் பழங்கால ஓலைச்சுவடிகளிலும், பாரம்பரிய வைத்தியர்களின் மருத்துவ குறிப்புகளிலும், புதைந்து காணப்படுகின்ற மருத்துவ யுக்திகள் ஆய்வு செய்யப்பட்டு பயன் படுத்தப்படுகிறது. இதன் மூலம் பலனுள்ள, பாதுகாப்பான, சிகிச்சைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கி வருகிறோம்.

கடந்த 23 வருடங்களுக்கும் மேலாக எந்த வித விளம்பரமும் இன்றி தரமான சேவையின் மூலம் உலகின் முன்னணி சித்த மருத்துவமனையாக விளங்கிவரும் எமது ஸ்ரீராகவேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நீங்களும் பயனடையுங்கள்.

மருத்துவமனையை பற்றி

இந்தியாவிலேயே முதன் முறையாக மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்கான பிரத்யேக சித்த மருத்துவமனை

மேலும் அறிய

ஓலைச்சுவடி ஆராய்ச்சி மையம்

சித்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கணினி மயமாக்கப்பட்ட மருத்துவ ஓலைச்சுவடி நூலகம்

மேலும் கண்டறிய

மருந்து செய் நிலையம்

பழங்கால மருத்துவ சுவடிகளில் இருந்தும், பாரம்பரிய மருத்துவர்களின் வைத்திய குறிப்புகளில் இருந்தும் தேர்தெடுக்கப்பட்டு, மருந்துகள் தயார் செய்யப்படுகிறது

மேலும் அறிய

மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை

மூட்டு மற்றும் தண்டுவட நோய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வலி மாத்திரைகள் இன்றி சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை

சிகிச்சைகள் விவரம்

நாட்பட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை

நாட்பட்ட நோய்களுக்கு பின்விளைவுகள் மற்றும் பக்க விளைவுகள் இல்லாத சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை

சிகிச்சைகள் விவரம்

நல வாழ்வு சிகிச்சைகள்

நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுப்பதற்கும், வந்த நோய்களை விரைவில் குணப்படுத்துவதற்கும், ஆரோக்கியத்தை முழுமையாக மேம்படுத்தவும் சிறந்த சிகிச்சை

சிகிச்சைகள் விவரம்